அக்டோபர் 10 : உடுமலை
உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நாளை 11ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சாரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணை நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை நிறுவனரும், செயலாளர் களரி பயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு ஆசான் வீரமணி வரவேற்று பேசுகிறார். சோழமாதேவி அக்ஷரா வித்யா மந்திர் தொடக்கப்பள்ளி துணை சேர்மன் முருகேசன் முன்னிலை வகிக்கிறார். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார்.
போட்டிகளை விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி துவக்கி வைக்கிறார். இதில் திருப்பூர் மாவட்டசைலாத் சங்க சிலம்ப விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சைலாத் சிலம்ப சங்கம், பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை பயிற்சியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
