பாண்டி கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை நுணா குப்பம் வழியாக கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரில் வந்த கார் ஒன்று கணவன் மனைவி வந்துகொண்டிருந்தஇரு சக்கர வாகனம் மீது மோதியது.
கார் மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் கணவன் மனைவி உட்பட நோனா குப்பம் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தனர்.

அப்போது அங்கு இருந்த பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லினர்.
உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்தனார்.
அங்கு வந்த தீயணைப்பினர் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து படகின் உதவியால் தண்ணீரில் கணவன் மனைவியை தேடும் வேலை தீவிரமாக நடந்தது.
காவல் துறையினரும் தீயணைப்பு வீரர்களும் 1 மணி நேரமாக தீவிரமாக தேடி ஒரு வழியாக கணவன் மனைவியை தண்ணீரில் அவங்களது சடலங்களை மீட்டடுத்தனர்.
அடுத்தப்படியாக சடலங்களை மீட்டடுத்து விட்டு ஆம்புலன்ஸ் தொடர்ப்பு கொண்டு அவசரமாக கணவன் மனைவி சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.
இந்த விபத்தை பற்றி காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.
பண்ருட்டி செய்தியாளர் :
R.விக்னேஷ்
