திருநெல்வேலி,ஜன.1:-
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) வி.கீதா, (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் ஆகியோரின் மேற்பார்வையில், மாநகர காவல்துறை பல்வேறு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திடும் வகையில், இன்று ( ஜனவரி.11) காலையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில், பாளையங்கோட்டை சரகத்திற்கு, இரண்டு இரு சக்கர ரோந்து வாகனங்களும், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி டவுண் மற்றும் மேலப்பாளையம் ஆகிய மூன்று சரகங்களுக்கும், தலா ஒரு இரு சக்கர ரோந்து வாகனம் என மூன்று வாகனங்கள் என, மொத்தம் ஐந்து இரு சக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, துப்பாக்கி ஏந்திய போலீசாருடன், மாநகர காவல் துணை ஆணையர்கள், கொடி அசைத்து துவக்கி வைத்தனர். சுழற்சி முறையில், இந்த வாகனங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார், ரோந்து பணிகளில் ஈடுபடுவர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்