செப் 05. உடுமலை –
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கோடை பொது விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக மலையும் மலை சார்ந்த பகுதிகளும் முதன்மையாக திகழ்கிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உள்ளது.
இங்கு சுயம்புவாக எழுந்துள்ள எழுந்தருளியுள்ள மும்மூர்த்தி களை தரிசனம் செய்யவும் இயற்கை தண்ணீரை அளிக்கும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை இணைந்து வந்துள்ளது.
அதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு கார் வேன் உள்ளிட்ட வானங்களில் வந்தனர் பின்னர் மலை மீது உள்ள அருவிக்கு சென்று வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக அடிவார பகுதிக்கு வந்து சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
அப்போது படகு இல்லம் அணைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
