திருப்பூர் மாவட்டம் , உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.வல்லகுண்டாபுரம் கிராமத்தில் சுமார் இரண்டு ஏக்கரில் அரசின் பொது இடத்தில் மயானம் ஒதுக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட சிரமம் ஏற்பட்டுள்ளது.

மயானத்துக்கு செல்லும் பாதையை மறித்து வேலி அமைத்தும், கட்டிடம் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளிடம் அந்த பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினர்.
மயான ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக உத்தரவிட்டார்.
