திருநெல்வேலி,நவ.12:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “சிதம்பராபுரம்” பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30). தினக்கூலி தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தெரு நாய், இவரை கடித்தது. இதை ஐயப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், வழக்கமாக வேலைக்கு சென்ற ஐயப்பனின் உடல்நிலை, திடீரென மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனை, அவருடைய குடும்பத்தினர், நாகர் கோவில் அருகே, “ஆசாரிப்பள்ளம்” என்னும் இடத்தில் அமைந்துள்ள, நாகர்கோவில் “அரசு” மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில், ஐயப்பனுக்கு “ரேபிஸ்” நோய் “பாதிப்பு” இருப்பது, உறுதியானது.
இதனை தொடந்து ஐயப்பனுக்கு, “தீவிர சிகிச்சை” அளிக்கப்பட்ட போதிலும் கூட, சிகிச்சைக்குப் பலனின்றி, ஐயப்பன் இன்று (நவம்பர். 12) பரிதாபமாக, உயிரிழந்தார்.
இதற்கிடையே, ஐயப்பனுக்கு சிகிச்சை அளித்த போது, இரண்டு டாக்டர்களை ஐயப்பன் தாக்கியதாகவும், அவர்களுக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், “மருத்துவத்துறை வட்டாரங்கள்” தெரிவித்தன.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
