திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் முஜீப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளரான முஜீப்புக்கு முஜீப் என்ற ஒரே பெயர் கொண்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 70 நபர்கள் ஒன்று சேர்ந்து திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடைக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஹோட்டல் உரிமையாளர் முஜீப் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டார்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திண்டுக்கல் ஹோட்டல் சங்கம் மற்றும் முஜீப் நிறுவனம் மூலம் மொய் விருந்து நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஏழு லட்சம் வரை நன்கொடை அளித்தனர் இதன் மூலம் கிடைத்த நிதியை கேரள மாநில முதல்வரிடம் நிவாரண தொகையாக வழங்கினார்கள்
இதற்கு கேரளா மாநில மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக முஜீப் என்ற பெயர் கொண்ட 70 நபர்கள் வருகை தந்து அந்த நிறுவனத்திற்கும் ஹோட்டல் உரிமையாளர் முஜீப் மரியாதை செலுத்தினர்
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் வருகின்ற 70 பேரும் முஜிப் என பெயர் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.