வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் அவ்வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி சேதப் படுத்திய பின்னர் ரிஸ்வான் என்பவரின் கடைக்குள் புகுந்தது.
இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதமானது.இதை தொடர்ந்து காரில் வந்த நபர்கள் காரை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலிசார் விசாரணை நடத்தினர்.மேலும் காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காரில் மது பாட்டில் உள்ளிட்டவை இருந்தால் காரில் வந்த நபர்கள் மது போதையில் காரை இயக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர்
அப்சர் மர் வான்
திருப்பத்தூர் மாவட்டம்