திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப் பாளையம் சேகர்நகர்பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (49).இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இன்று வீட்டை பூட்டிக் கொண்டு தண்டபாணி மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்று விட்டனர். பின்னர் மதியம் தண்டபாணி வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 24¾ பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.இது இது குறித்து தண்டபாணி உடுமலை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின்படி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு வெ.ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபலகிருஷ்ணன் தலைமையில்
சிறப்பு உதவி ஆய்வாளர் பஞ்சலிங்கம்,தலைமை காவலர் முத்துமாணிக்கம், தனிப்பிரிவு காவலர்கள் பாரதி ராஜா ,மாசிலாமணி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் சின்னவீரம்பட்டி பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் அருகே தனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஆசாமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார்கள் அதில் தண்டபாணி வீட்டில் நடைபெற்ற திருட்டுக்கும் ஆசாமிகளுக்கும் தொடர்புடையது தெரியவந்தது.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருச்சியை சேர்ந்த மாரிமுத்து(33) திருவண்ணாமலையை சேர்ந்த சத்தியராஜ்(33) திருவாரூரை சேர்ந்த முருகானந்தம்(45) ஆகியோர் தண்டபாணி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து
15 பவுன் நகை மீட்கப்பட்டது.மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
உடுமலை செய்தியாளர் : மணி