உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப் பாளையம் சேகர்நகர்பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (49).இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இன்று வீட்டை பூட்டிக் கொண்டு தண்டபாணி மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்று விட்டனர். பின்னர் மதியம் தண்டபாணி வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று…