கோத்தகிரி : நவம்பர்,01
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் இன்று (1.11.2025)நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவிருக்கும் பணிகளை கூறி பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

இக்கிராம சபைக்கூட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சுய உதவிக்குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்குதல், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார்,ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார்,அரசு துறை அலுவலர்கள் மற்றும் அவைத் தலைவர் போஜன், கோத்தகிரி நகர மன்ற தலைவர் ஜெயக்குமாரி, ,கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
