தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் வென்றிலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்கள் சுடுகாடு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவை வேண்டி திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமையில் மாவட்ட செயலாளர் சங்கை மதன் முன்னிலை வகித்தனர்
திராவிடத் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கை மதன் கூறும் போது ;-
இந்தியா சுதந்திரம் வாங்கி 78 ஆண்டு காலம் ஆகிவிட்டது மக்களின் அடிப்படை பிரச்சினையான ஒரு மனிதன் இறப்புக்குப் பின் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்யக்கூட இடமில்லாமல் நாதியற்ற சமூகமாக இருக்கிறது அதனை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தாழ்த்தப் பட்டவர்களின் அடிப்படை வசதியினை ஏற்படுத்தி தர திராவிடத் தமிழர் கட்சி சார்பில்
கேட்டுக் கொள்ளப் படுகிறது.
நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மணிகண்டன்,
தென்காசி தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜமுனா
திராவிட வீரன் மாவட்ட இளைஞரணி செயலாளர் வடக்கு காவலாகுறிச்சி மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.