திருநெல்வேலி,நவ.19:-
நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, நான்கு மண்டலங்களுள் ஒன்றான, பாளையங்கோட்டை மண்டலத்தின், விரிவாக்கப்பகுதியான சாந்திநகரில் செயல்பட்டுவரும், “சைவ வேளாளர் சங்கம்” சார்பில், தூத்துக்குடி மாவட்டம், “ஓட்டப்பிடாரம்” நகரில் அமைந்துள்ள, வ.உ.சி. “நினைவு” இல்லத்தில் வ.உ.சி.க்கு, மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்படும், வ.உ. சிதம்பரனாரின் 89-வது “நினைவு தினம்” செவ்வாய்க்கிழமை {நவம்பர்.18} தமிழகமெங்கும், கடைபிடிக்கப்பட்டது.
அதனையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் சங்கத்தைச் சார்ந்த, உறுப்பினர்கள் மொத்தம் 50 பேர், வ.உ.சி. பிறந்த மண்ணாகிய, தூத்துக்குடி மாவட்டம் “ஓட்டப்பிடாரம்” நகரில், “தமிழ்நாடு அரசு” சார்பிலான அருங்காட்சி யகமாகவும், ஆயிரக்கணக்கான நூல்களுடன் கூடிய அருமையான நூலகமாகவும், மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும், வ.உ.சி. “நினைவு” இல்லத்தில், வ.உ.சி. யின் திருவுருவச்சிலைக்கு, “தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம்” சாந்தி நகர் கிளை சார்பாக,
“மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், “தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம்” சாந்தி நகர் கிளை தலைவர் கோமதிநாயகம், செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர் நாராயணன் பிள்ளை, செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் ஆகியோர் உட்பட, மொத்தம் 50 பேர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: ”மேலப்பாளையம்” ஹஸன்.
