செப் 19 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆசாத்நகரைச் சேர்ந்த முகமது சுதீரின் 6 வயது மகள், நேற்று டியூஷன் வகுப்பு முடித்து வீடு திரும்பியபோது சாலை விபத்துக்குள்ளானார்.
அர்ஷிப் (23) என்பவர் ஓட்டி வந்த கார் அந்த சிறுமியை மோதி கடுமையாக காயமடையச் செய்தது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக காயமடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் கார் ஓட்டிய அர்ஷிப்புக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிதாங்கோடு சிறப்பு நிருபர் பீர் முகமது
