திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி அருகே காதல் கணவன் கைவிட்டதால் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு அமர்ந்து மனைவி சூரியபிரியா (20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஏற்கனவே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தப் பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
