உடுமலை நவம்பர் 17.
புதர் மண்டி காணப்படும் அமராவதி கிளை ஓடை மற்றும் குமரலிங்கம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமராவதி கிளை ஓடை செல்கிறது. பாப்பான்குளத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் இந்த ஓடை அமைந்துள்ளது ஓடையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது தற்போது இந்த ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள ஊராட்சி அலுவலகம் மற்றும் குடியிருப்புக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஓடையை தூர்வாரி செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் குமரலிங்கத்தின் அமராவதி ராஜ வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலிலும் புதர் மண்டி காணப்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் குமரலிங்கம் ராஜாவாய்க்காலையும் தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
