தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையிலும் ஆங்காங்கே சிறுமிகள் பெண்கள் மயக்கமடைந்து வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக சன்னதி தெரு, கீழரத மேல ரத வீதிகளில் முறையாக தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என பக்தர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
16ஆம் கால் மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதை தடுப்பு கம்பிகள் வைத்து இருபுறமாக அடைத்து வைத்து மக்கள் அனுமதிக்கப்பட்ட வருவதால் நெரிசல் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஆங்காங்கே ஏற்பாடு செய்யாததாலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆங்காங்கே மயக்கம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பெண் பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்கள் தண்ணீர் மோர் ஆகியவற்றை பரிமாறி வருகின்றனர்.
மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி
