திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்
கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர்.

பொதுமக்கள் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்து அன்னதானம் பெற்றுச் சென்றனர். அருள்மிகு ரெணகாளியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர் மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக வெள்ளி ரதம் மாலை முக்கிய வீதிகளில் உலா வரும் எனக் கூறினர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
