நாகர்கோவிலில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடக்கம். இயற்கை உரம் 5 கிலோ ரூ.30; தென்னை விளக்குமாறு ரூ.30
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், ஆசாரிப்பள்ளம் மேற்கு மண்டல அலுவலகத்தில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ஐஸ்வர்யா IAS அவர்களின் உத்தரவின்படியும், மாநகர நல அலுவலர் திருமதி. சரோஜா அவர்களின் அறிவுரையின்படியும் இந்த விற்பனை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நுண் உர செயலாக்க மையத்தில் தயாரிக்கப்படும் ‘செழிப்பு இயற்கை உரம்’ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தென்னை ஓலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை விளக்குமாறுகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன….
