தமிழ்நாடு
திண்டுக்கல்லில் போதை மாத்திரை, கத்திகளுடன் 3 பேர் கைது: காவல்துறை அதிரடி!
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் விற்பனைக்காக போதை மாத்திரைகள், டானிக்குகள் மற்றும் பட்டாகத்திகளுடன் பதுங்கியிருந்த சிறுவன் உட்பட 3 பேரை நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (S.P.) ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையைத் தொடர்ந்து ஊத்துக்குளி குளக்கரை சீரமைப்பு! கட்சியின் கோரிக்கையைத் தொடர்ந்து ஊத்துக்குளி குளக்கரை சீரமைப்பு!
கல்குளம்: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மணக்கரை புதுக்கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஊத்துக்குளியின் உடைக்கப்பட்ட கரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தின் கரை சில ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாகச் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், குளத்தின் நிலை குறித்து அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். குளத்தைச் சீரமைக்கக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள்…
காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் கன்னியாகுமரி SP, ஆயுதப்படை வாராந்திர கவாத்தில் பங்கேற்று அணிவகுப்பு, ஒழுங்குமுறைகளை ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி, அக்டோபர் 3, 2026: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் ஐபிஎஸ், நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்துப் பயிற்சியில் பங்கேற்று, காவலர்களின் அணிவகுப்பு மற்றும் ஒழுங்குமுறைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவலர்களின் குறைகள், பணிசார் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். கவாத்துப் பயிற்சியின்போது காவலர்களின் அணிவகுப்பு மற்றும் ஒழுங்கு நடைமுறைகளைப் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறையினரின் பணிச்சூழல் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். காவலர்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பணிசார்…
திண்டுக்கல் GTN கல்லூரியில் பார்மசி துறை துவக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா
திண்டுக்கல் GTN கல்வி குழுமத்தில் இன்று புதிய துறை துவக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் இயங்கி வரும் GTN பார்மசி கல்லூரியில் (Pharmacy Council of India அங்கீகாரம் பெற்றது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) இந்த கல்வி ஆண்டு முதல் B.Pharm மற்றும் http://D.Pharm ஆகிய பிரிவுகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி…
கோவை வடவள்ளி ரவுண்டானாவில் அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா விமர்சை!
கோவை: கோவை வடவள்ளி ரவுண்டானா அருகில் அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா நேற்று (02.10.2026) மாலை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ‘நேர்டு’ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். நிகழ்வின் தொடக்கமாக, காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு, அவரது புகழைப் போற்றும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். ஆகியோர் காந்தியடிகளின் தியாகத்தையும், அவரது கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உரையாற்றினர்….
ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்கள்: பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து தடம் பதித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!
கோவை: வறுமையை வென்று, தடைகளைத் தாண்டி ஆசிய விளையாட்டு மேடையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ். கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தடம் பதித்துள்ளார்: எளிய பின்னணியில் உருவான நாயகி: 1998 செப்டம்பர் 20 அன்று கோவையில் பிறந்த வித்யாவின் குடும்பப் பின்னணி மிகவும் எளியது. தந்தை ராம்ராஜ் லாரி ஓட்டுநராகவும், தாய் மீனா வீட்டு வேலை செய்தும் குடும்பத்தைக் காப்பாற்றி…
பழனி சண்முக நதியில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பாக 40 டன் குப்பைகள் அகற்றம்: தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஆர்வம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், பாரம்பரியமாக சண்முக நதியில் புனித நீராடுவதையும், முன்னோர்களுக்கு ஈமக் காரியங்கள் மற்றும் தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தர்ப்பணம் செய்வோர் தங்களது துணிகளை ஆற்றிலேயே விட்டுச் செல்வது, சாக்கடை நீர் கலப்பது மற்றும் துர்நாற்றம் வீசுவது போன்றவற்றால் நதி கடுமையாக மாசடைந்து, பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் நதி முழுவதும் ஆகாயத் தாமரைகள் (அமலச்செடி) மண்டிக் கிடந்ததால் பக்தர்கள்…
பழனி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கல்
தமிழக அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் தாய்மாமன் திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தாய்மார்களுக்கு உறுதுணையாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழக அரசு சார்பில் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பழனி அருகே…
கீரனூரில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இரஞ்சித் குமார் மணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி ஆயக்குடியில் இரஞ்சித் குமார் மணி தலைமையில் நடைபெற்ற தவெகவின் புதிய நிர்வாகிகள் இனையும் விழாவில் தங்களை மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ளும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து கீரனூரில் இருந்து வருகை தந்த அனைவரும் இரஞ்சித் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன்…
பழனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையம் அருகே ஆர்.எப் ரோட்டில் பெரும் பரபரப்பு. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாமல் தற்காலிகமாக மண் போட்டுமூடப்பட்டிருந்ததால் விபரீதம் நடந்துள்ளது. பழனியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து, சாலையோரம் ஒதுங்கிய போது, மழையால் சேறும் சகதியுமாக மாறியிருந்த பள்ளத்தில் டயர் முழுவதும் இறங்கி சாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு…
