Headlines
வெள்ளி ஒளியில் மிளிரும் பழனி சிவன் சன்னதி: 88.9 கிலோ வெள்ளித் தகடு பொருத்தும் பணி துவக்கம்!

வெள்ளி ஒளியில் மிளிரும் பழனி சிவன் சன்னதி: 88.9 கிலோ வெள்ளித் தகடு பொருத்தும் பணி துவக்கம்!

பழனி : செப்டம்பர் 08, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள சிவன் சன்னதி, தற்போது வெள்ளி ஒளியில் ஜொலிக்கத் தயாராகி வருகிறது. பழனி சிவன் சன்னதியில் 89 கிலோ வெள்ளித் தகடுகள்: ஒரே குடும்பத்தின் நெகிழ்ச்சியான நன்கொடை! பழனி மலைக்கோயில் மகாமண்டபத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சிவன் சன்னதியில் சுமார் 89 கிலோ அளவில் வெள்ளித் தகடுகள் பதிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (ரமேஷ்) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைத்…

Read More
பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்

பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்

பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்துவதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விக்னேஷ் வருகை தந்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், நகரச் செயலாளர்…

Read More
தென்காசியில் நடந்த 23-வது மாநில வூஷூ போட்டியில் தங்கம் வென்றார் Rightway பள்ளி மாணவர்!

தென்காசியில் நடந்த 23-வது மாநில வூஷூ போட்டியில் தங்கம் வென்றார் Rightway பள்ளி மாணவர்!

தென்காசியில் 23-வது மாநில அளவிலான * (Wushu) போட்டி* நடைபெற்றது. இதில் 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட, மதுரை அவனியாபுரம் Rightway Islamic Matriculation School-ன் 10-ம் வகுப்பு மாணவர் முஹம்மது ஸாலிஹ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் தேசிய அளவிலான வூஷூ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர் ஜஹாங்கீர்,பொருளாளர் சையத் அபுதாஹிர்,…

Read More
சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை:சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்தவித குளறுபடிகளுக்கும் இடம் தராமல் துல்லியமாக நடத்தப்பட வேண்டும் என்றும், ஓபிசி (OBC) மக்களின் சமூகநீதி உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:​தற்போது நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல், நேரடியாக அவர்கள் கூறும்…

Read More
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செப்டம்பர் 12 முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செப்டம்பர் 12 முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. ​ரோப்கார் இயக்கம் தொடர்பான அனைத்து இயந்திரங்களும் NDT பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ரோப்கார் இயக்கத்திற்கான சாஃப்ட் பழுது கண்டறியப்பட்டு, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய சாஃப்ட் கொல்கத்தாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை NDT பரிசோதனை செய்யும் பணியும்,…

Read More
பழனியில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனியில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து தமிழக மக்கள் கழகம் என்ற இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் தலைமையாக நகர பொறுப்பாளர் காளிதாஸ்மகளிர் அணி பொறுப்பாளர் சுகந்தி மற்றும் மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில…

Read More
பழனியில் பிரம்மாண்ட யோகாசன போட்டி: அரசுப் பள்ளிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் வலியுறுத்தல்

பழனியில் பிரம்மாண்ட யோகாசன போட்டி: அரசுப் பள்ளிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் வலியுறுத்தல்

பழனி : செப்டம்பர் 9, பழனியில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு யோகாசன போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன. இப்போட்டியில் திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது யோகா திறமைகளை வெளிப்படுத்தினர். 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்ற…

Read More
பழனியில் வ.உ.சி-யின் 155-வது பிறந்தநாள் விழா - முதல்வருக்கு சிலை கோரிக்கை.

பழனியில் வ.உ.சி-யின் 155-வது பிறந்தநாள் விழா – முதல்வருக்கு சிலை கோரிக்கை.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானா பகுதியில் வ.உ.சி மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரபல தொழிலதிபர் சித்தநாதன் சன்ஸ் எஸ்.ஜி.சிவனேசன் தலைமை தாங்கினார். விழாவில் வ.உ.சி-யின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வ.உ.சி மன்ற தலைவர் எஸ்.பி.அசோக் பெருமாள், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர்…

Read More
திருச்சூரில் சோகம்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

திருச்சூரில் சோகம்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் விவரங்கள்: இன்று நள்ளிரவு கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு மையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது, வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இந்த விபத்தில் ஈடுபட்ட கார் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனமாகும். மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி…

Read More
புறாவிளை காணியின மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் : சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை: ஆட்சியர் உறுதி.

புறாவிளை காணியின மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் : சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை: ஆட்சியர் உறுதி.

கன்னியாகுமரி, செப். 5: கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைகோடி மலைவாழ் கிராமமான புறாவிளையில் வசிக்கும் காணியின மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., உறுதியளித்துள்ளார். திருவட்டார் வட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை பகுதிக்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர், மலைவாழ் காணியின மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். சாலை, குடிநீர், சோலார் வசதி மற்றும் தடையில்லா…

Read More