தமிழ்நாடு
குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு: நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே உரை!
மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த வகுப்பறை கட்டிடத்தைத் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே கலந்துகொண்டு பேசியதாவது:“குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தனது 100-வது ஆண்டைக் கொண்டாடுவது மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வாகும்….
பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
கொடைக்கானல், பூண்டி : ஜூலை 24 கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் எல்லைக்குட்பட்ட பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அரசுச் சொத்தான இக்குடிநீர் விநியோகக் கட்டமைப்பு சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால், தினமும் பல நூறு லிட்டர் சுத்தமான குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடருமானால், வரும் காலங்களில் பூண்டி பகுதி மக்களுக்குக்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?
பழனியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்ட வழங்க பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு வழங்க பட்டுள்ளதா என்ற கேள்வி எழும்பி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தற்பொழுது தெரிய வந்த நிலையில் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட…
திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1,10,000 பணம் பறிமுதல்.
திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சீலப்பாடி, K.R.நகர் அருகே பூங்கோடை பகுதியில் சங்கர் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய சங்கர்(43), பாண்டியராஜன்(50), கார்த்திக்(34), மதுரைவீரன்(36), சரவணகுமார்(27), முரளி(35), லிங்கராஜ்(37), சேசுராஜ்(50) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,10,000 பணத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம்…
27 ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்து வாங்கிய சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக புகார்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதியவர் மனு.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர், 27 ஆண்டுகள் குவைத்தில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் அபகரிக்கப்பட்டதாகவும், தனது வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டதாகவும், தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விரிவான மனு அளித்துள்ளார். மனுதாரரின் கூறுகையில், இளவயதிலேயே குவைத் நாட்டில் கொத்தனாரின் கையாளாக பணிபுரிந்து 27 ஆண்டுகள் சேமித்த வருமானத்தில் பூதப்பாண்டி அருகே வீடு மற்றும் நிலம் வாங்கியதுடன், கேரள மாநிலம்…
பராமரிப்பின்றி புதர் மண்டிய ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம்: திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் பூண்டி பகுதி பெண்கள் அவதி!
கொடைக்கானல்:ஜூலை 21, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி மேலூர் பகுதியில் அமைக்கப்பட்ட மகளிர் கழிப்பறை வளாகம் பராமரிப்பின்றி வீணாகி வருவதாகவும், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூண்டி ஊராட்சியில் பதினாறாவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ. 81,000 மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டப்பட்ட நாளில் இருந்தே இந்தச் சுகாதார…
ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை இயக்க சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி கொய்யா சந்தையில் தலித் விவசாயிகள் மீது பழனி வருவாய்த் துறையினரால் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரி ஆயக்குடி விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றன.. ஆயக்குடியில் உள்ள தலித் விவசாயிகள் நிலத்தில் சில ஆண்டுகளாக வருவாய் துறை அதிகாரிகள் துணையோடு மண் கடத்திச் செல்லும் மாஃபியா கும்பல் மீது…
பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூண்டியில் செயல்பட்டு வரும் DD320 பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உடனடியாக நிரந்தர மேலாளரை நியமித்து, சங்கத்தின் செயல்பாடுகளை சீரமைக்க வலியுறுத்தி பூண்டி, கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூர், கிளாவரை ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் தெய்வேந்திரன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சுற்றியுள்ள 5 கிராம மக்களின் ஒரே…
கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!
பூண்டி, ஜூலை, 17: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் சார்பாகச் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்….
பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம்…
