Headlines

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) பழனி நகர் மற்றும் ஒன்றிய குழுக்கள் சார்பில் பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடதுசாரி கட்சிகளை கணக்கெடுக்க சொன்ன குழிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் மீதும், இடதுசாரி மாணவர் இயக்கங்களின் போராட்டங்களை ஒடுக்க சுற்றறிக்கை விடுத்த இதற்கு காரணமான தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *