தமிழ்நாடு
சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா.
சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழாபேரூராட்சித் தலைவர் திருமதி.தேவி மன்னவன், தலைமையில் நடந்தது,சூலூர் வட்டத்திற்கு புதியதாக அரிமா சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம முன்னாள் எம்.எல்.ஏ திரு,எஸ் எஸ் பொன்முடி, அவர்களின் மகன்,திரு.விக்னேஷ், சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் திரு,மன்னவன், அரிமா மாவட்ட செயலாளர் திரு,சஜி டேவிடE. O திரு, சரவணன், தலைமை எழுத்தர் திரு,வேலுசாமி, சூலூர் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக…
அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா
மதுரையில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு டைரி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட செய்தியாளர்…
எல்லா சாமியும் ஒண்ணுதா
மதுரை கீழவாசல் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறுவர்கள், முருகன் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமிட்டு பங்கேற்பு இஸ்லாமியர்கள் போல் தொப்பி அணிந்து வந்த சிறுவனும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த சிறுவனும் ஒன்றாக சேர்ந்து வந்ததும், அங்கிருந்தவர்களை கவர்ந்தது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்.
தென்காசி : டிச-25 தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி செயலர் சகாய செல்வமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் அபுதாஹிர் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் நடனம், பைபிள் வாசித்தல், பாட்டு மற்றும் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ்…
தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.
தென்காசி : டிச- 25 தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி வருகை பவனியில் சிறு குழந்தைகள் குழந்தை யேசு சொரூபத்தை கரங்களில் ஏந்தி வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலியினை தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட் பணி. ஜியோ சந்தனம் அடிகளார் தலைமையேற்று நிறைவேற்றினார். “இன்று…
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் மருதுபாண்டியன் நியமனம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், கழகத்தின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாக, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை முழுவதும் 32 ஊராட்சியும் மற்றும் 15 வார்டு முழுவதுமாக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக திருநகர் திரு. M. மருதுபாண்டியன் அவர்களை நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம், கழகத்தில் புதிய அரசியல் உற்சாகத்தையும், தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. கழகப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க, தமிழக வெற்றிக்…
அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட குன்னூர்_சட்டமன்றத்தொகுதி, மேலூர் ஒன்றியத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் – 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் A.T.லாரன்ஸ், குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி M.C., கழக விளையாட்டு மேம்பாட்டு அணி…
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி டிசம்பர் 24 தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட பிரானுர் பார்டரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி அனைத்து கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி இந்த சட்டமானது தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ளதாகவும் கடந்த 2005…
திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாதமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்- பிரம்மாண்ட அன்னதானம்2026 வெற்றியை தளபதி விஜய்க்கு பரிசாக அளிப்போம்
திருப்பரங்குன்றம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன், “மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும்…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பிரேம்ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருக்கோவிலூர் தேவியகரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் திருமால் (27) என தெரியவந்தது மேலும் எங்கிருந்து…
