தென்காசியில் 23-வது மாநில அளவிலான * (Wushu) போட்டி* நடைபெற்றது. இதில் 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட, மதுரை அவனியாபுரம் Rightway Islamic Matriculation School-ன் 10-ம் வகுப்பு மாணவர் முஹம்மது ஸாலிஹ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் தேசிய அளவிலான வூஷூ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர் ஜஹாங்கீர்,பொருளாளர் சையத் அபுதாஹிர், * முதல்வர் R. பாத்திமா மற்றும் பயிற்சியாளர் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
