பழனி: பழனி அருகே பாப்பம்பட்டியில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா காவல் துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
60 கிலோ போதைப்பொருள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
ஒருவர் கைது – சிறையில் அடைப்பு இது தொடர்பாக பாப்பம்பட்டியைச் சேர்ந்த சுதாகர் (40) என்பவரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஆனந்த் மற்றும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
