Headlines

பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை இணைந்து நடத்தும் 13-வது மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகப் பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் உத்தரவின் பேரில், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் காலை 10.00 மணியளவில் இப்போட்டிகள் சிறப்பாகத் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்வினை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு சண்முகநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில உறுப்பினர் பேராசிரியர் மோகனா, பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி கண்ணகி, திண்டுக்கல் இலக்கிய கள மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு பாலச்சந்தர், பழனி மைய ஒருங்கிணைப்பாளரும் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான முத்தமிழ்க்கவிஞர் வைரபாரதி, முன்னாள் வட்டாரக் கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் கோகிலவாணி, மைக்கேல், பிரேம், ராமுசெல்வம், விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளுக்குப் பல்வேறு கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் நடுவர்களாகச் செயல்பட்டனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *