நாகர்கோவில்,ஆக 28,2026 :
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு செட்டித் தெருவைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் சிவாவின் மகனும், ‘கேப் செஸ் அகாடமி’யின் (Cape Chess Academy) மாணவருமான அஸ்வத், சர்வதேச அளவில் சாதனை படைத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ (Grandmaster) பட்டம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் 1-வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 38-வது மற்றும் இந்தியாவின் 98-வது கிராண்ட் மாஸ்டராகவும் உருவெடுத்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
தமது 3 வயதிலிருந்தே தந்தையிடம் சதுரங்கம் பயின்று வரும் அஸ்வத், தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் வென்று இத்தகுதியை எட்டியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலக சாம்பியன் ஆவதே எனது லட்சியம்; சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தரவரிசையை உயர்த்த அரசு மற்றும் ஸ்பான்சர்களின் ஆதரவு பெரிதும் உதவும்” எனத் தெரிவித்தார்.
சாதனை நாயகன் அஸ்வத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
