நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. த.வெ.க. அரசின் 100 நாட்கள் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
த.வெ.க. முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான பால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் தொழிலதிபர் பால்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 800-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. மாநகரின் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை கவுரவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
