திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி மையத்தில் முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மேற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் விஜயகாந்த் திருவுருவு படத்திற்கு மலர் தூவி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன.

தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு வீடற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன..
மேலும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் திருமுருகன் வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, காளிமுத்து, மானூர்மாரி, சத்திரியன் சரவணன், எல்லப்பன், தண்டபாணி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன..
தொடர்ந்து
மாவட்ட செயலாளர் கூறுகையில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வேலைபாடுகளை தடுத்து நிறுத்தப்பட்டன..
தொடர்ந்து வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் அதிகப்படியான வெற்றிகளை பெறுவதற்கு கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்..
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
