Headlines

பழனி அருகே பள்ளிவாசல் சேதத்தை பார்வையிட்டு விசிக சார்பில் ஒரு லட்சம் நிதி உதவி ஜமாத்தார்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்..

பழனி அருகே பள்ளிவாசல் சேதத்தை பார்வையிட்டு விசிக சார்பில் ஒரு லட்சம் நிதி உதவி ஜமாத்தார்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெரிய கலையமுத்தூரில் மஸ்ஜிது நூர் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிவாசல் வழியே தனியார் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் பட்டாசுகள் வெடித்த போது பட்டாசின் தீப்பொறி பள்ளிவாசல் மேற்கூரை மீது விழுந்து தீப்பற்றி எரிந்தன. தொடர்ந்து பள்ளிவாசல் மேற்கூரை மற்றும் மின்விசிறி இருக்கைகள் கேமரா உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர்த்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணன் தனது விசிக நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகி அபுதாகிர் மற்றும் ஜாஹிர் ஆகியோரிடம் நிதி உதவியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.

தொடர்ந்து பள்ளிவாசலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தெரிவித்தனர்.

மேலும் பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற நிலையில் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்து ஆறுதல் கூறி வலம் வரும் விசிக மாநில நிர்வாகி ஜே.பி.சரவணனுக்கு அப்பகுதி பொதுமக்களும் ஜமாத் நிர்வாகிகளும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *