தமிழ்நாடு
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.
திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…
இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப்…
பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை இணைந்து நடத்தும் 13-வது மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகப் பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் உத்தரவின் பேரில், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் காலை 10.00 மணியளவில்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரி மாணவன் படுகொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் வயது 35 மானாமதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் வயது அம்பது இன்பர்களின் மகளை காதலித்து வந்தார் ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கும் காதல் விவகாரம் தெரியவந்தது இவர்கள் காதல் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை மேலும் விண்ணின் தம்பி அருண் ராஜா வயது 19 இவர்கள் காதலுக்கு எதிராக…
பழனியில் சிவ சேனா ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறைக்கு வேண்டுகோள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள், விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் வேல் யாத்திரை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிவசேனா பொறுப்பாளர்கள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் கொண்டாடப்படுவதைப் போல, தமிழகத்திலும் கணபதி விழா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாகக் கொண்டாடும் வகையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி காவல்துறை விதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தாலும், அது…
கன்னிவாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 வாகனங்கள் பறிமுதல்: கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை!
ஆகஸ்ட் : 22 திண்டுக்கல் / ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி அருகே நீர்நிலைகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி (JCB) இயந்திரங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவத்தின் பின்னணி: கன்னிவாடி அடுத்த தெத்துப்பட்டி குளம், மாங்கரைகுளம், சிறுநாயக்கன்பட்டி குளம், வாகைகுளம் உள்ளிட்ட அரசு நீர்நிலைகளில் அனுமதியின்றி வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர்…
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) பழனி நகர் மற்றும் ஒன்றிய குழுக்கள் சார்பில் பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை கணக்கெடுக்க சொன்ன குழிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் மீதும், இடதுசாரி மாணவர் இயக்கங்களின் போராட்டங்களை ஒடுக்க சுற்றறிக்கை விடுத்த இதற்கு காரணமான தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம்…
காதல் தகராறில் வாலிபர் தலையில் ஹாலோபிளாக் கல்லால் தாக்குதல்: வாலிபர் கைது, சிறையில் அடைப்பு!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, ஒருதலைக் காதலால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மடத்துக்குளம் அடுத்துள்ள துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனசின்னத்துரை என்பவரின் மகள் சௌமியாவை, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் ரஞ்சித் (19) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அடிக்கடி மதுபோதையில் பெண் வீட்டார் வசிக்கும்…
பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியக் கோரிக்கைகள் வருமாறு:பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு வரும்…
மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக்குழுக் கூட்டம் (Anti-Drug Club Meeting) இன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் தலைமை தாங்கி, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விரிவாக உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பி வலியுறுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. நாகராஜன், கல்லூரியின்…
