தமிழ்நாடு
பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்
பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கோவில் தேவஸ்தான…
திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்
திண்டுக்கல், மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்தது இதனால் லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் மற்றும்…
நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், கண்ணன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து தியாகராஜனுக்கு ரூ….
