உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிதிலமடைந்த பாளையக்காரர் சிலைகள்.
உடுமலை : நவம்பர் 01, தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு நிலப்பகுதிகள் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வை செய்ய பாளையக்காரர்கள் அமைக்கப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டு வரை பாளையக்காரர்களின் ஆட்சி இந்த மண்ணில் இருந்துள்ளது. பிற்பாடு அவர்கள் ஜமீன்தார்களாகவும், நிலக்கிழார்களாகவும் மாறிவிட்டனர். உடுமலையைச்சுற்றியுள்ள பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட பாளையங்கள் நிர்வாகத்தில் இருந்தன. உடுமலை வட்டம் பள்ளபாளையம் ஊரின் தெற்குப்பகுதியில் சிறிய சிவன் கோயில் உள்ளது. கோயிலுக்கு வெளியே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் கற்சிலையில் கைகூப்பி நின்ற நிலையில் உள்ள…
