திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!
திருநெல்வேலி,நவ.4:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.4) வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடடிவக்கைகள் எடுக்கப்படும்!”- என, மனுதாரர்களிடம் மேயர் “உறுதி” அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மனுக்களை பரிசீலிக்குமாறு, அறிவுறுத்தினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் எம்.புரந்திரதாஸ்…
