நாகர்கோவில், நவம்பர் 3:
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு, அனைத்து சமூக மக்களாலும் போற்றப்படும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் வி.ஹெச்.பி மாநில நிர்வாகி காளியப்பன் மற்றும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட மஜக (மனிதநேய ஜனநாயக கட்சி) சார்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
வி.ஹெச்.பி மற்றும் பாஜகவினர் திட்டுவிளை பூதப்பாண்டி பேரூராட்சியை முற்றுகையிட்டு, காயிதே மில்லத் அவர்களை “பயங்கரவாதி”, “தேசவிரோதி”, “தீவிரவாதி” போன்ற அவதூறான சொற்களால் அவமதித்து, சமூக கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை மாவட்ட மஜக (கி) செயலாளர் மு. முஜீப் ரஹ்மான் அவர்கள் தலைமையில் அளித்தனர்.
இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமீர்கான், கிழக்கு மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் மாஹின் இப்ராஹிம், (கி) மாவட்ட இளைஞரணி செயலாளர் யாசிர் அரபாத், (கி) மாவட்ட வணிகர் சங்க அணி செயலாளர் சம்மில், நாகர்கோவில் மாநகர செயலாளர் இடலை M.H. சாகுல், இளைஞரணி மாநகரச் செயலாளர் சல்மான் பயாஸ், கோட்டார் கிளை செயலாளர் நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
