Headlines
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்...

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர்…

Read More
உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

உடுமலை நவம்பர் 02. உடுமலை நவ.3- கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் கிராம ஊராட்சிகளில் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி உள்ளாட்சி தினத்தை ஒட்டி உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி போடி பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்ட வளர்ச்சி அதிகாரி சிவகுருநாதன்( வ.ஊ) தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம்…

Read More
உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.

உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.

உடுமலை நவம்பர் 02. உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூபாய் இரண்டரை கோடி காய்கறிகள் விற்பனையானது.உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகள். கீரைகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால் காய்கறி களின் விளையும் குறைவாக இருக்கும் இதன் காரணமாக உடுமலை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து…

Read More
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்.

உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கும் திருமூர்த்தி அருவிக்கும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுகாதார வளாகம் முழுமையாக பழுதடைந்துவிட்ட நிலையில் அதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

Read More
பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே அமராவதி முல்லைப் பண்ணை துவக்கி 50 ஆண்டுகளாகும் நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த சதுப்பு நில வாழ் முதலைகள் பராமரிக்கும் முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இப்பண்ணையில் குட்டிகள் முதல் 70 வயதான முதலைகள் வரை உள்ளன….

Read More
கோவை நகர்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வாங்க நன்கொடை.

கோவை நகர்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வாங்க நன்கொடை.

சமூக செயற்பாட்டுக் களம் சார்பில் கோவை,கோவில் மேடு நகர்புற நலவாழ்வு மையத்தில் ஊசி மருந்துகள் வைப்பதற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, மருந்துகள் வைப்பதற்கான அலமாரிகள், நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் பயனாளர்களுக்கு மருந்துகள் வழங்க தேவையான முன்று அளவுகளில் 6000 கவர்கள் நேற்று மாலை, (01/11/2025) நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவரிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர்- சம்பத் குமார்

Read More
உடுமலையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

உடுமலையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

உடுமலை நவம்பர் 01. தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் ஆய்வு மற்றும் உதவிகள் வழங்கும் விழா உடுமலையில் நடந்தது. நகராட்சி ஆணையர் விநாயகர் வரவேற்றார். கவுன்சிலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன், மூத்த உறுப்பினர் ஆசாத் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அஞ்சுன் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தூய்மை பணியாளர்களுக்கு நடத்திட்ட உதவிகளை வழங்கினார். சங்கரா…

Read More
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி : நவம்பர்,01 மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் இன்று (1.11.2025)நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவிருக்கும் பணிகளை கூறி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இக்கிராம சபைக்கூட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி…

Read More
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்.

உடுமலை : நவம்பர் 01. தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஒகுமார் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர் .அப்போது சிறப்பு பணிகள் தொடர்பான அரசியல் கட்சியினருக்கு ஆர்டிஓ விளக்கம் அளித்தார். பின்னர்…

Read More
அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு.

அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு.

உடுமலை : நவம்பர் 01. பூளவாடி அரசு மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. உடுமலை வழக்கறிஞர் .சத்தியவாணி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.குடிமங்கலம் காவல்துறையினர் சட்ட உதவி பற்றி கூறினர். நிறைவாக ஆசிரியை மங்களவினாயகி நன்றி கூறினார்.

Read More