உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
உடுமலைநவம்பர் 05. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை,கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனி பிரதோஷம், போன்ற பல்வேறு ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்னாபிசேகத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கு (லிங்கத்திற்கு) தயிர்,பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால…
