திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.7) காலையில், இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பருவமழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு நடைபெற்றது….
