Headlines
பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கல்!

பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கல்!

பழனி அருகே ஆயக்குடியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தீபாவளி பரிசுப் பொருட்கள் – தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கி கௌரவிப்பு! சேலை, வேட்டி, இனிப்புகள் வழங்கி தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சியில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2…

Read More
பக்தர்கள் வசதிக்காக புதிய மின்கல ஊர்தி: பழனி திருக்கோயிலுக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகம் உபயம்!

பக்தர்கள் வசதிக்காக புதிய மின்கல ஊர்தி: பழனி திருக்கோயிலுக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகம் உபயம்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றிச் செல்ல கிரிவீதியில் கட்டணமில்லா மின்கல ஊர்தி (Battery Vehicle) சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை கிரிவீதியில் 11 இருக்கைகள் கொண்ட 14 ஊர்திகள், 23 இருக்கைகள் கொண்ட 22 ஊர்திகள் மற்றும் 14 இருக்கைகள் கொண்ட 1 ஊர்தி என மொத்தம் 37 மின்கல ஊர்திகள் பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில், இன்று (02.11.2026) சுப்ரீம் மொபைல்ஸ்…

Read More
தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு: கோவையில் திமுக மகளிரணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு: கோவையில் திமுக மகளிரணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: தமிழகத்தில் தவெக ஆட்சியில் சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் அன்னம்மாள், கனிமொழி, ரங்கநாயகி, ஜெயலலிதா, கவிதா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர்கள் துரை. செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி…

Read More
275 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேற்றம்: பழனி பள்ளி மாணவர்கள் சாதனை!

275 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேற்றம்: பழனி பள்ளி மாணவர்கள் சாதனை!

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஐவர் மலையில், பள்ளி மாணவர்கள் 3 பேர் 275 படிக்கட்டுகளிலும் தொடர்ச்சியாக யோகாசனம் செய்தபடி மலையேறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். பழனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான நகுலன், மேகவர்ணிகா மற்றும் ரெணுஷ்கா ஆகிய மூவரும் யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம்: ஐவர் மலையின் அடிவாரத்தில் தொடங்கி உச்சி…

Read More
மாணவர்களை அச்சுறுத்தும் புகையிலை: காரத்தொழுவு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மாணவர்களை அச்சுறுத்தும் புகையிலை: காரத்தொழுவு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் “புகையிலை ஒரு உயிர் கொல்லி” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில், பொது சுகாதாரம்…

Read More
13-ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அன்னதானத்தின் எல்லை வரைறுக்கும் வரலாற்றுச் சான்று!

13-ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அன்னதானத்தின் எல்லை வரைறுக்கும் வரலாற்றுச் சான்று!

திருப்பூர் மாவட்டம் கொழுமம்-கொமரலிங்கம் பகுதியில் பாழடைந்த நிலையில் உள்ள ‘ஆத்தோர வெங்கட்ராமர் கோயில்’ என அழைக்கப்படும் சிவன் கோயிலில், கொங்குச் சோழர் காலத்து அபூர்வக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஆர்வலர்கள் அய்யப்பன் மற்றும் ஜீவா ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில், 1909-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் படி எடுக்கப்படாமல் விட்டுப்போன இக்கல்வெட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்வெட்டின் பின்னணியும் முக்கியத்துவமும்: காலம்: கொங்குச் சோழ மன்னர் விக்கிரம சோழனின் 25-ஆம் ஆட்சி ஆண்டு (பொ.ஆ….

Read More
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு அவசியம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு அவசியம்!

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – ‘மிஷன் லைஃப்’ திட்டத்தின் முக்கியத்துவம் விளக்கம். கன்னியாகுமரி, அக். 12: வளர்ச்சியடைந்த பாரதம் 2047 இலக்கை அடைவதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நிலையான வாழ்க்கை முறைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் விஞ்ஞானி டாக்டர் சி. ஆர். மகேஷ் வலியுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களிடையே…

Read More
பழனி ரயில் நிலையம் திறப்பு விழா: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மக்கள் அர்ப்பணம்!

பழனி ரயில் நிலையம் திறப்பு விழா: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மக்கள் அர்ப்பணம்!

பழனி, அக். 11: தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.20.15 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையத்தின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக பழனி மற்றும் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். பிரதமரின் திறப்பு…

Read More
நத்தம் பகுதியில் ஆன்லைன் செயலின் மூலம் மோசடி - 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

நத்தம் பகுதியில் ஆன்லைன் செயலின் மூலம் மோசடி – 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல், நத்தம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆன்லைன் செயலி வழியாக முதலீடு செய்தால் 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என தனியார் நிதி நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து முதலீடு செய்தனர். இதற்கிடையே நிதிநிறுவனம் மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முகவர்களாக செயல்பட்ட நத்தம் காசம்பட்டி ரமேஷ்(30), அவரது மனைவி அனிதா(26), விஜய் 27 உள்பட 9 பேரை கைது செய்தனர். அந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ரமேஷ், அனிதா, விஜய்…

Read More
ரூ.3.09 கோடியில் சரக்கல்விளையில் அதிநவீன RSETI வளாகம்

ரூ.3.09 கோடியில் சரக்கல்விளையில் அதிநவீன RSETI வளாகம்.

கன்னியாகுமரி, அக்டோபர் 8: சரக்கல்விளை பிரியா நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (IOB RSETI) புதிய வளாகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, அவர்களை சுயதொழில் மற்றும் தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில் RSETI செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நாகர்கோவில் பால்பண்ணை அருகே அனீஃபா நகரில் இயங்கி…

Read More