Headlines
கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள். பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர். பண்ருட்டி செய்தியாளர் :R. விக்னேஷ்

Read More
பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !

பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !

செப் 2, கன்னியாகுமரி : நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட தமிழகப் போக்குவரத்து துறையின் குளிர்சாதனப் பேருந்தில், அஜாக்கிரதையான செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டியதுடன், பான் பராக் போட்டு துாங்கியவாறும் இருந்ததாக பயணிகள் கூறினர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்தனர். “பொதுமக்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநரை உடனடியாக…

Read More
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து : இருவர் பலத்த காயம் !

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார், இருசக்கரம் வாகனத்தின் மீது மோதி விபத்து : இருவர் பலத்த காயம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேந்தமங்கலம் சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையை நோக்கி வந்த கார் ஒன்று இருசக்கரம் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது சென்னை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 108. ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் உளுந்தூர்பேட்டை வட்டம் களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது விழுப்புரம்…

Read More
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, கோவை சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் குறுமைய(zonal) விளையாட்டு போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.25, & 02..0.25நடைபெற்றுவறுகிறது. விழாவில் மேயர் திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள்,சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாமன்ற உறுப்பினர்கள் விளையாட்டு ஆய்வாளர், நடுவர்கள் மற்றும்பள்ளிக் கல்வித் துறை அநிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதிக்போட்டிகள்,மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் நாளை நடைபெறும். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
எட்டாங்குன்றில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா

எட்டாங்குன்றில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா.

செப் 1, கன்னியாகுமரி திருவட்டார்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட எட்டாங்குன்று பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். உடன், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :

செப் 1, கன்னியாகுமரி கன்னியாகுமரி பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு உதவித் திட்டமாக மானிய விலையில் பரிசல்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக வழங்கினார். இதன் மூலம் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பெரும் பலன் அடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கோட்டாறு மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு !

கோட்டாறு மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு !

செப் 1, கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில், இயக்குநராக திருமதி ஆன்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், Dr. பைசல், Dr. அரசு, திருமதி கிளாடிஸ் கில்டா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ளனர். கோட்டாறு மறைமாவட்டத்தில் இக்குழு உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தீயில் கருகிய நிலையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு….!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தீயில் கருகிய நிலையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு….!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெரிய கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியை சேர்ந்த டோமினிக் (54) மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது. இவர் குன்னூர் அருகே தேயிலை தூள் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இவருடைய மனைவி லிட்வின் இவர் ட்ருக் பக்காசூரன் மலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்..இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லிட்வின் மற்றும் அவரது மகள் ஆகியோர் சேலாஸ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற நிலையில் அவர்களது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தின் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இன மக்களை மாற்று சமூகத்து இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதன் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R அந்தோணிசாமி

Read More