செப் 1, கன்னியாகுமரி :
நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில், இயக்குநராக திருமதி ஆன்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், Dr. பைசல், Dr. அரசு, திருமதி கிளாடிஸ் கில்டா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ளனர்.
கோட்டாறு மறைமாவட்டத்தில் இக்குழு உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
