எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் ஜோசப் ராஜ் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேலு எறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிர்வாதம் ஆகியோர்களை வரவேற்றார். மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு…
