பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பல ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களாக பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட உரிய அங்கீகாரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், அரசுப் பேருந்து பஸ் பாஸ் வழங்குதல், அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க உரிய அனுமதி வழங்குதல், PRO செய்தியாளர் குழுக்களில் தகுதியான நிருபர்களை இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
அனைத்து ஊடகங்களுக்கும் அரசு செய்திகளை சமமாக வழங்க வேண்டும் என்றும், தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணியாற்றும் நிருபர்களின் செய்தி சேகரிப்பு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் அரசு அங்கீகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட செய்தியாளர : சம்பத்குமார்
