Headlines

பழனியில் வ.உ.சி-யின் 155-வது பிறந்தநாள் விழா – முதல்வருக்கு சிலை கோரிக்கை.

பழனியில் வ.உ.சி-யின் 155-வது பிறந்தநாள் விழா - முதல்வருக்கு சிலை கோரிக்கை.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானா பகுதியில் வ.உ.சி மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரபல தொழிலதிபர் சித்தநாதன் சன்ஸ் எஸ்.ஜி.சிவனேசன் தலைமை தாங்கினார்.

விழாவில் வ.உ.சி-யின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வ.உ.சி மன்ற தலைவர் எஸ்.பி.அசோக் பெருமாள், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் குகன், சுவாமி விலாஸ் முருகேசன், குமார், மகளிர் அணியைச் சேர்ந்த இந்திரா திருநாவுக்கரசு, சுராங்கனி கணேசன், துர்கா கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சரவண பொய்கை கந்த விலாஸ் என்.பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், கோல்டன் கல்வி நிறுவனம் மாசிலாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நிர்வாகிகள், பழனி பகுதியில் வெள்ளாளர் பிள்ளைமார் சமூகத்தினர் அதிகமாக வசிப்பதால், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாருக்கு பழனியில் முழு திரு உருவச் சிலை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *