Headlines

பழனியில் அரசு இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக அவதூறு பரப்பியவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர் பரபரப்பு பேட்டி…

பழனியில் அரசு இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக அவதூறு பரப்பியவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர் பரபரப்பு பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அதில் முக்கிய குற்றவாளியாக பத்திரப்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஜஸ்டின் மணிகண்டன் நூறு கோடி இடத்தை பத்திர பதிவு செய்த அதே நாளில் பழனியில் உள்ள இட்டேரி சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 55 சென்ட் இடம் சௌந்தரபாண்டியன் என்பவருக்கு பதிவதாக அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த இடமானது பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கிற்கு பதிலாக 1974 இல் பரிவர்த்தனையாக பழனி நகராட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சௌந்தரபாண்டியன் தனது அக்ரீமென்ட்டை முறையாக பதிவதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற பொழுது, அன்று ஜஸ்டின் மணிகண்டன் பணியில் இருந்ததால் அவர் இந்த அக்ரிமெண்டை பதிவு செய்துள்ளார்.

எனவே ஜஸ்டின் மணிகண்டன் இந்த அக்ரிமெண்டை சௌந்தர பாண்டிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததால் , சௌந்தர பாண்டிக்கு எதிராக உள்ளவர்கள் இது போலியான பத்திரப்பதிவு, அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் விதமாக பத்திரம் பதிவு செய்துள்ளனர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளனர்.

இதனால் மணமுடைந்த சௌந்தர பாண்டியன் இந்த பதிவு பற்றி அனைத்து உண்மையான டாக்குமெண்ட்களை அதிகாரிகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பதாகவும், இதுபோன்று என் மீது தவறாக அவதூறு பரப்புவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த இடத்தை நாங்கள் கிரையம் செய்யவில்லை 20 லட்சத்திற்கு அக்ரிமெண்ட் மட்டுமே செய்துள்ளோம், மேலும் இந்த இடம் 60 கோடி மதிப்பிலான இடமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த பத்திரப்பதிவு பற்றிய அவதூறு சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *