Headlines

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1,10,000 பணம் பறிமுதல்.

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது- ரூ.1,10,000 பணம் பறிமுதல்

திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சீலப்பாடி, K.R.நகர் அருகே பூங்கோடை பகுதியில் சங்கர் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய சங்கர்(43), பாண்டியராஜன்(50), கார்த்திக்(34), மதுரைவீரன்(36), சரவணகுமார்(27), முரளி(35), லிங்கராஜ்(37), சேசுராஜ்(50) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,10,000 பணத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *