Headlines

பழனியில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனியில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து தமிழக மக்கள் கழகம் என்ற இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வில் தலைமையாக நகர பொறுப்பாளர் காளிதாஸ்
மகளிர் அணி பொறுப்பாளர் சுகந்தி மற்றும் மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.

தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ஆபித்
மாநிலச் செயலாளர் ராம்குமார்
மாநில இணைச் செயலாளர் ஐயப்பன் மற்றும் கணேசன்
மாநில பொருளாளர் முகமதுஷா ஒருங்கிணைப்பாளர் கோதீஸ்வரன், செல்லையா ஆகியோர் கலந்து கொண்டு தமிழக மக்கள் கழகம் சார்பாக பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினர்..

தொடர்ந்து இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடிகர் அஜித் பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் அவர் தலைமையில் கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாகவும் இதுவரை அவரின் அனுமதி கிடைக்கவில்லை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் விரைவில் அவரின் அனுமதி பெற்று இயக்கம் தொடங்க இருப்பதாகவும் எடுத்துக் கூறினர்..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *