பழனி : தொப்பம்பட்டி , செப்டம்பர் : 02,
பழனி தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கதை சொல்லல் மற்றும் ஓவியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு பழனி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் வாழ்த்துகளுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு சண்முகநாதன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு கிருஷ்ணமூர்த்தி, திருமதி காளீஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செந்தில் ராஜா, ஆசிரியர் பயிற்றுநர் திரு பழனிச்சாமி மற்றும் திண்டுக்கல் இலக்கிய களச் செயற்குழு உறுப்பினரும் முத்தமிழ் எழுச்சிக்கவிஞருமான வை. வைரபாரதி ஆகியோர் தலைமை ஏற்றுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஜே.ஆர்.சி ஆலோசகர் ஆசிரியர் ரேவதி தலைமையில் ஜே.ஆர்.சி மாணவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 89733 50663
