திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கரிகாரன் புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் உட்பட 25க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி தேங்காய் வெட்ட தொடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வை கேள்விப்பட்டு விரைந்து வந்த கணேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் தேங்காய் வெட்டக்கூடாது எனது தோட்டம் என்று கூறிய நிலையில் பட்டியல் சமூகம் என்பதால் கணேசனை சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் அருவருக்கத் தக்க வார்த்தைகளை சீதாராமன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் பேசியுள்ளனர்.
தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தேங்காயை வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்லும் பொழுது டிராக்டர் முன்னே உட்கார்ந்து மறியல் செய்ய முயன்றதால் தொடர்ந்து டிராக்டரை அவர்கள் மீது ஏற்ற முயற்சி செய்த நிலையில் இருவருரையும் சராமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் இருவரும் தாக்கப்பட்ட நிலையில் கணேசன் கையில் சீதராமன் என்பவர் கத்தியால் கிழித்துள்ளார். தொடர்ந்து இரத்த காயத்துடன் காணப்பட்ட கணேசன் மற்றும் சரமாரியாக தாக்கப்பட்ட அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக பழனி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாதியின் பெயரால் அத்துமீறி சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சீதாராமன் மற்றும் அவருடன் வந்த அனைவரும் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கணேசன் தெரிவித்து வருகிறார்…
